RSS

Monthly Archives: March 2013

காதலை காதலிக்க

காதலில் விழுந்தேன் என நினைத்தேன்
காதலையே காதலிக்க  ஆரம்பித்தேன்
அப்படி என்னதான் இருக்கிறது உன்னிடம்
அனைவரையும் இழுக்கிறாய் உன் பக்கம்

வைராக்கியம் இருந்தாலும்
தெனாவெட்டு இருந்தாலும்
அழகை கட்டி மயக்குகிறாய்
குணத்தை கட்டி ஈர்த்துகொல்கிறாய்

மக்களை மட்டுமா ஆட்டிவைக்கிறாய்
உயிரினம் அத்துணையும் அல்லவா அடிமை படுத்துகிறாய்
உன்னிடம் தப்பிக்க என்றுமே முடியாது
உனக்கு அடிமை அனால் மீண்டு எழ முடியாது 

 
2 Comments

Posted by on March 28, 2013 in Tamil Verses

 

செந்தாமரை செவ்விதழ்

செந்தாமரை முளைக்குமாம் சேற்றிலும்
செந்தாழம்பூ முள் புதரிலே பூக்குமாம்
செவ்வாழை போல் இனியவளே
செந்தமிழில் கவி படித்து நகைப்பயோ??

வார்த்தைகள் இருக்கின்றன பல கோடி
மகிழ்ந்தார்கள் மக்கள் அதில் கவி பாடி
உன் மேன்மையை சொல்ல சொற்கள் இல்லை
அலைகிறேன் நான் வார்த்தைகளை தேடி

இம்மையிலும் மறுமையிலும்
கலைமகளை எண்ணி தவம் புரிந்தாலும்
உன்னை வர்ணனை செய்யும்
கவிதை கிட்டது போலும்

பொறாமை வருகிறது பிரம்மனிடம்
படைக்கும் ஆற்றல் அவனிடம் மட்டும்
பிரம்மா இவளின் மேல் கவி பாட
ஆற்றல் நீயும் எனக்கு கொடுப்பாயா???

====================================== சுகுமார் ரா

 
2 Comments

Posted by on March 28, 2013 in Tamil Verses

 

அன்னமே தேன் கிண்ணமே

ஓடையோரம் நீ எனக்கு காத்திருக்க
ஓயாது நீரோடை சிலிர்த்துக் கொண்டிருக்க
ஒய்யாரமாய் அன்னங்கள் நீந்தி வர
ஓய்வுக்காய் காத்திருக்கும் உன் கண்கள் அதை ரசிக்க

அவன் எண்ணங்கள் உன் மனதில் ஓட
கண்ணிமைகள் நீரோடயினை கூர்ந்து நோக்க
கால் சலங்கைகள் மெல்லிய ஒழி எழுப்ப
அன்னப்பறவைகள் உன் அழகில் மயங்கி நிற்க

வீர திருமகன் உனக்காக திரும்பி வருகிறான்
வீரத்துடன் போராடி நாட்டுக்கு வெற்றி அளித்தவன்
விவேகத்துடன் எதிரிகளை வீழ்த்தியவன்
வியப்புற்று அனைவரையும் கலங்க செய்தவன்

வெற்றி திருமகளே வாகை சூட
வெற்றிமாறன் என புகழ் கொண்ட
தலைவன் ஓடோடி வருகிறான் கண்ணே
தலைவியை ரசிக்கின்றன அண்ணன்கள் அவள் முன்னே
===============———————=============——————- சுகுமார் ரா 

 
Leave a comment

Posted by on March 26, 2013 in Tamil Verses

 

IPL போட்டிகளில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை

அரசியலும் விளையாட்டும் ஒன்றோடொன்று என்றும் கை கோர்த்து வெற்றி பெற்றதில்லை. அத்தனையும் அறிந்த பின்னரும் , அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும், அவர்கள் சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க விட மாட்டோம் என தமிழக முதல்வர் இன்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார் என செய்திகள் வெளியாயின.

விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டின் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? யோசித்தால் தெரியும் , அது மிக குறைவு என. அதுவும் ஐ பி எல் போட்டிகளில் விளையாடுவதற்கும் ஈழ தமிழர் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?

இதே முதல்வர் அவர்கள் போர் நடந்த காலத்தில் போர் என்றல் பலர் சாக தான் செய்வார்கள் , அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை , அதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம் தமிழ் நட்டு மக்களுக்கும் அவர்களுக்கும் மொழி ஒன்றே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். அனால் இன்று அதற்கு நேர் மாறாக கூறுகிறார். இது உண்மையிலே ஈழ தமிழர்க்கு ஆதரவு கொடுப்பதாக எப்படி கருத முடியும்? நாள் ஒரு பேச்சு , பொழுதுக்கு ஒரு முடிவு என எடுப்பவரிடம் எவ்வாறு இதை எதிர்பார்க்க முடியும்?

சரி , இவர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக , மதிய அரசு இவ்வாறு பதில் எழுதினால் என்ன செய்வார்?

ஈழம் என்பது இலங்கையின் பகுதி. ஈழ தமிழர்க்கும் இலங்கைக்கும் நடப்பது உள்நாட்டு பிரச்சனை. அதற்காக நாம் ஏன் இலங்கை விளையாட்டு வீரர்களை இந்தியாவில் விளையாடுவதை தடை செய்ய வேண்டும்? விளையாட்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? அடுத்த நாட்டின் பிரச்னையில் நாம் ஏன் தலை நுழைக்க வேண்டும்? இத்தனையும் மீறி அவர்களுக்கு அதரவு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், சொல்பவர்களை சட்டரீதயாக எதிர்கொள்ள நேரிடும் என்றல் இவர்கள் என்ன தான் செய்வார்கள்? இந்த மாதிரி பதில் கொடுக்க தற்போதய மதிய அரசு முடிவெடுக்காது என்பது என் கருத்து.

கடைசியில் விளையாட்டு போட்டிகளை பயன்படுத்தி அரசியல் செய்யும் அளவிற்கு அவல நிலைக்கு வந்துவிட்டார்கள் நம் அரசியல் பிரமுகர்கள். இதை நினைத்தால் தான் வேதனையாக உள்ளது. போராட வேண்டிய நேரத்தில் போராட மாட்டோம் என்று கூறி விட்டு, இப்போது சின்னஞ்சிறு விடயங்களை எல்லாம் வைத்து அரசியல் புரிவது மக்களை நம்பவைத்து எமாற்றவதற்கு தானோ ? இல்லை இவர்களுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்ததோ ?

பின் குறிப்பு : இது என் கருத்து மட்டுமே . யாரையும் மனதில் வைத்து கொண்டு எழுதியது இல்லை. நடக்கும் நடப்புகளை வைத்து மட்டுமே எழுதியது. இன்னும் கருத்து சுதந்திரம் சிறிதளவு நிலவுவதாக நான் நம்புகிறேன்.

 
4 Comments

Posted by on March 26, 2013 in Cricket, Politics

 

The first ever 4-0 whitewash by India

It has been 81 years since India made its debut in International test cricket. Though it had won many tests and series in home and a few away, never India had made it 4-0.

The first evet 4-0 result came against the Aussies, who had never had such a result in 43 years till India made it. There are many contributions that helped team India to achieve this feat.

In the first test Aussies opting to bat first made a daunting 380 in first innings,with a good century by Clarke and a fifty from Henriques. They were on the dominant part till India lost 2 wickets cheaply. And showed some fight later by taking two more. Enter MS Dhoni ,who along with Virat and Bhuvi made India get massive lead of 123.

India then bowled out Australia, and had a mere 50 runs to win. If Henriques had not scored 81 in 2nd innings, the kangaroos might have lost by an innings.

Match 2
Again its the aussies who won the toss and batted first. Bhuvi gave initial burst with 3 scalps and spinners did the rest damage. Clarke declared at 237-9. India lost Sehwag early and Vijay,Pujara added 370 runs for 2nd wicket and took away the game from kangaroos. Then Spinners made aussies collapse for a mere 131 in 2nd innings,losing the match by innings.

3rd match
The day 1 was washed out because of rain. Australia made 408 thanks to couple of 90+ contributions from Smith and Starc. India tried a new opening pair , handing a debut to Shikar Dhawan, who demolished the aussie bowling and became the fastest century maker on debut and went on to score 187 in 174 balls,he lofted very few and played all along the ground for majority of his scoring.. Vijay played defensive and made 150+ followed by his hyderabad knock of 167.

The opening stand was 289 but regular fall of wickets has made indian innings to end at 499, with kohli stranded at 67.

Its Phil huges and starc who saved aussies from an another innings defeat. Its Bhuvi who gave start with 3 wickets. Rest damage did completely by the spin trio of Ashwin,Ohja and Jadeja. The target of 133 was achieved with 15 balls leff in the mandatory overs,with contributions from Vijay,Pujara,Kohli,Sachin,MSD and India produced result in 4 days.

4 th Match
In absence of Clarke,Watto took the captaincy,won the toss,but end result was the same. Aussies got  bowled out for 262, with siddle ending as top scorer. India got good start from opening pair Vijay and Pujara. Then India lost wickets at regular intervals,with late hitting by Dhoni and Jadeja,the innings folded at 272 on day 3 morning.

It was the spinners again reducing the aussies to 94-7. Again siddle saved them with a 50 and giving target of 155 to india with 7 sessions to play.

India started attacking from the word go. Lost Vijay early. Then Pujara,Kohli bought the score to 123. Kohli,Sachin and Rahane got out quickly and the score was 128-4. In came MSD, pujara scored 3 fours and levelled the score. Dhoni hit the winning boundary and a history was made.

 
Leave a comment

Posted by on March 25, 2013 in Cricket, Sports

 

தனி தமிழகம் முழக்கம் – என் பார்வை!

சமீப காலமாக பலர் தனி தமிழ் தேசியம் என்ற கருத்தினை வெளிபடுத்தி வருகின்றனர். எனக்கு சில விடயங்கள் வியப்பையும் , சில விடயங்கள் கடுப்பையும் குடுக்கின்றன. என் பார்வையில் ஒரு சிறு அலசல் இங்கே பதிக்கிறேன்.

தற்போதய நிலவரம்/சரித்த்திரம்  :

தமிழ்நாடு இந்தியாவின் தென் கோடியில் உள்ள ஒரு மாநிலம். மெட்ராஸ் மாகாணம் ஆக விசாகபட்டினம் வரை விரிந்திருந்த பகுதியினை ஆந்திரம், தமிழகம் என மொழி பேசுபவர்களின் அடிப்படையில் இரு மாநிலங்கள் ஆக்கினர். நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து யாரோ ஒருவராவது தமிழகம் தனி நாடக அறிவிக்க பட வேண்டும் என முழங்குவது கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்.

தமிழக சரித்திரத்தை சிறிது நோக்கினால் , கோதாவரி முதல் காவிரி வரை ஒரே அரசாட்சி ஆக பல மன்னர்கள் ஆண்டனர் என்பது தெரிந்த விடயமே. கடைசியாக ஆங்கிலேயர்களுக்கு முன்னர் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர் ஆட்சிகாலம் தென்னகதிதில் கோதாவரி முதல் காவிரி வரை ஒரே குடைக்குள் ஆளப்பட்டது.

கடந்த 60 ஆண்டுகளாக தமிழகம் மற்ற மாநிங்களுக்கு நிகராக வளர்ந்து கொண்டே தான் வந்தது. கல்வி , வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என எல்லா வகையிலும் முதல் ஐந்து மாநிலங்களில் இருந்தது தான்.இந்தி மொழி எதிர்ப்பு என ஆரம்பித்த நாளில் இருந்து மத்திய அரசிடம் மோதல் போக்குடன் இருந்து கொண்டே வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் கூட்டணி வைத்து தமிழக  பிரமுகர்களுக்கு மந்திரி பதவிகள் , தமிழ் நாட்டிற்கு பல நல திட்டங்கள் , அத்திட்டங்களில் ஊழல் என சிறப்புட்ட்று வந்தது.

புதிதாய் எழுந்த முழக்கம்:

செய்த ஊழல்களை காங்கிரஸ் தான் செய்தது , தமிழக மந்திரிகளுக்கு ( பாராளுமன்ற) எந்த வித தொடர்பும் இல்லை என மக்களை நம்ப வைக்க, அவர்களை உணர்ச்சி பூர்வமாய் ஏமாற்ற முளைத்த ஒரு யுக்தி தான் இந்த தனி தமிழகம் முழக்கம் என்பது என் கருத்து. இல்லை எனில் என்றும் இல்லாத அளவிற்கு என் இன்று மட்டும் இவ்வாறு முழங்குகின்றனர் ?

இதன் அடிப்படை காரணம் தனி தமிழ் தேசியம் மட்டும் தானா?

ஒரு வேலை அப்படியே  இருக்கும்  பட்சத்தில் இத்தனை ஆண்டு காலம் ஏன் அதை எதிர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தனர் ? மந்திரி பதவிகளுக்கு பேரங்கள் நடத்தினர்?

வாக்களித்த மக்கள் என்ன ஏமாளிகள் என்று நினைத்து வருகிறார்களோ?

சரி , இத்தனை காலம் அவர்களுக்கு இது புலப்படாது , இப்போதே புலப்பட்டதாய் வைத்து கொள்வோம்.

இவ்வாறு ஒரேடியாக தமிழ் தேசியம் கொடுத்தே ஆக வேண்டும் என்று முழங்கு வது சரியா?

தமிழ் தேசியத்தின் தேவைக்கான அடிப்படை கரணங்கள் என்ன?
ஈழ விடுதலைக்கு இந்திய அரசாங்கம் உதவவில்லை என்பது மட்டும் தானா?

தமிழகம் ஒடுக்கபடுகிறது என்று கூறினால் , அது சரியானதாய் இருக்காது. ஏனெனில் பல திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வழங்க பட்டன, மத்திய மந்திரி பதவிகள் கேட்ட எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டன. மத்திய அரசிடம் இருந்த வர வேண்டிய விடயங்கள் கிட்ட திட்ட வந்தன தமிழகத்திற்கு அல்லது நம்மவர்கள் வரவைக்க செய்தனர் என்று கூட சொல்லலாம்.

தீர்க்கமான சிந்தனையுடன் , சரியான அடிப்படை காரணங்களுடன் மட்டுமே இது போன்ற கோரிக்கைகள் முழக்கங்கள் செய்ய வேண்டும் என்பது என் கருத்து. இல்லை இனி பல தமிழர்களின் வாழ்கை இதனால் சீரழிக்கபடுமே தவிர , ஒரு மேம்பாடும் இருக்காது.

பின் குறிப்பு : இது முழுக்க என் கருத்து மட்டுமே. யாரையும் மனதில் வைத்து எழுதியது இல்லை . இன்றைய செயல்களின் நிலவரத்தினை மட்டும் மனதில் கொண்டு அலசப்பட்டது

 
6 Comments

Posted by on March 25, 2013 in Politics

 

தமிழக அரசியலும் ஈழ தமிழர் பிரச்சனையும்

இது என் முதல் அரசியல் சார்ந்த பதிவு. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாதது. சில உண்மைகளை மட்டும் மூலமாய் கொண்டு சிறிதளவு அலசுவது மட்டுமே.

சமீப காலமாக நடக்கும் அரசில் யுக்திகளை கண்டு சிறிது நொந்து வெந்து போங்கவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழி மட்டுமின்றி இலங்கையின் ஈழத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால் , வேறு ஒன்றும் இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. இதை நம் அரசியல் சாணக்கியர்கள் எவ்வாறு பயன் படுத்தி கொண்டார்கள் என்று பார்க்கலாம். இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த கருத்துக்களே . புதிதாக ஒன்றும் இல்லை.
கடந்த தமிழக சட்டசபை தேர்தல்கள் நடக்கும் முன்னர் வரை , தற்கால தமிழக முதல்வர் அவர்கள் கூறியது ” போர் என்றால் பலர் இறக்க தான் செய்வார்கள் , அதுவும் ஒரு நாட்டின் உள்நாட்டு போருக்கு வெளிப்படையாக எப்படி இன்னொரு நாடு உதவ முடியும்”. யோசித்து பார்த்தால் இலங்கை உள்நாட்டு போருக்கு எவ்வாறு இந்திய அரசு வெளிப்படையாக உதவ முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதை வைத்து பலர் இங்கே அரசியல் புரிவது கண்டால் , அவர்கள் புரிந்து செய்கிரார்களா , இல்லை புரியாமல் செய்கிரார்களா என்று எனக்கு புலப்படவில்லை.
விடுதலை புலிகளை பற்றி எனக்கு தெரிந்த உண்மைகள் இவை.
1. இலங்கையில் தோன்றிய ஆறு தமிழ் படைகளில் ஒன்று இது.
2. இதன் தலைவர் மற்ற ஐந்து படைகளின் அழிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளதை கேள்வி.
3. இந்த ஆறு படைகளும் இணைந்ததை பார்த்தவர் யாரும் இல்லை. ஐந்து படைகள் என்ன ஆயின என்ற செய்தி எங்கும் தென்படவில்லை.
4. பிரபாகரனை தமிழ் பாதுகவலறாய் சித்தரித்தார்கள்.
5. பல முறை பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தும் ,தமிழர்களுக்கு  தனி நாடு கொடுத்தே ஆகா வேண்டும் என்று மட்டுமே கூறிக்கொண்டு வந்தவர் பிரபாகரன். அப்போது அதிக படியாய் இருக்கும் சிங்களர்களுக்கு இவர்கள் மேல் வெறி வராதா?
சரி , இப்பொழுது பாலச்சந்திரன் கொலை செய்தியை கேட்டு , இலங்கைக்கு எதிராய் ஐநா சபைக்கு தூது அனுப்பாவிடில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று கூறி ராஜினாமா கடிதங்களை வழங்கிய உறுப்பினர்களை கண்டால் இது உண்மை காரணமாய் தோன்றவில்லை.
சரி , இந்த அரசியல் தலைவர் ஈழ தமிழர்களுக்கு எவ்வாறு உதவினார் என்று பார்போம்.
1. பிரதமருக்கு பல கடிதங்கள் அனுப்பினார்.
2. அதை பற்றி கவலை இன்றி இருந்தார்.
3. மந்திரி பதவிகள் வென்றும் என்ற பொது மட்டும் , தள்ளாத வயதிலும் தலைநகர் சென்று பேரம் செய்தார்.
4. பல ஊழல்களில் பங்கு எடுத்துகொண்டார்கள் உறுப்பினர்கள் என வழக்கு ஓடி கொண்டே இருக்கிறது.
5. ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் என்று பல புத்தம் புது கட்சிகள் , இலங்கை போர் சித்திரங்களை வீடு வீடாய் சென்று காட்டி, அரியணையில் இருந்து இறங்க நேரிட்டது.
இன்னும் கூட்டணியில் இருந்தால் , இவர்களுக்கு கஷ்ட காலம் என கருத்து எழ ஆரம்பித்தது, சரியான தருணம் நோக்க , இந்த சம்பவம் உதவி செய்தது.
தமிழகத்தை ஆளும் இரு கட்சிகளும் என்றும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தது இல்லை. அவர்களுக்காக போராடியதும் இல்லை. அவர்கள் உலக அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்ற காரணத்தை கட்டி அரசியல் செய்தன.
தற்கால முதல்வர் , தேர்தல் நேரத்திற்கு முன்னர்  வரை , ஈழத்திற்கு எதிராய் கருத்து தெரிவித்தவர் தான். அனால் அவர் இவர்களை பாதுகாப்பார் என எப்படி நம் மக்கள் நம்பி வாக்களித்தனர்? இந்த கேள்விக்கும் விடை எங்கும் இல்லை.
மொத்தத்தில் , இலங்கையின் உள்நாட்டு போரினை காரணமாய் கட்டி இங்கு பல அரசியல்கள் நடக்கின்றன. அனால் அவர்களுக்கு நல்ல வழி மட்டும் பிறக்க எந்த அரசியல் கட்சியும் பெரிதாய் ஒன்றும் செய்தது இல்லை. உண்மையிலே ஈழ தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் , அதை செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறியபோதே நம் அரசில் பிரமுகர்கள் , தம் ஆதரவை நிறுத்தி இருக்க வேண்டும் . காலம் சென்றபின் இக்கோலம் எதற்கு ?
மொத்தத்தில் இங்கு தமிழ் சமூக காப்பாளர் என்று கூறி கொள்ளும் எந்த அரசியல் வாதியும் , அதை செய்வதில்லை. ஈழம் இலங்கையின் ஒரு பகுதி. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. தமிழ் பேசும் ஒரே விடயம் மட்டும் தான் இரண்டிற்கும் பொதுவானது. அன்றி நேரடியாய் அடுத்த நாட்டின் உள்நாட்டு போரினை எதிர்கொள்ளும் ஆட்ற்றல் நம் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு இல்லை என்பதே என் கருத்து.
பின் குறிப்பு : இது என் கருத்து மட்டுமே. யாரையும் ஆதரித்தோ , எதிர்த்தோ சொல்வது இல்லை. யாரேனும் புண்படும் படியாய் இருந்தால் , என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
 
31 Comments

Posted by on March 22, 2013 in General, Politics

 

பார்த்த உடன் பரவசம்

பார்த்த நொடியிலே பரவசமே – உன்
புன்னகை எனக்கு நவரசமே
பொங்குது இருக்கும் காதலெல்லாம்
பூக்குது மனதில் நந்தவனம்

அப்படி என்னதான் இருக்குது உன்னிடம்
அப்படியே ஈர்குது என்னை உன் பக்கம்
அழியா அழகிய ஓவியம் நீ
அதை அடைய நினைக்கும் கலைஞன் நான்

யோசித்து பார்த்தேன் பலமுறைகள்
யோசனைக்கு எட்டவில்லை காரணங்கள்
புலப்படவில்லை எனக்கு மட்டும்
ஏன் இந்த காதல்  மயக்கம் ????

=——-======——=====——-======——- சுகுமார் ரா

 
2 Comments

Posted by on March 22, 2013 in Tamil Verses

 

தனிமையின் தாக்கம்

தனிமையில் இனிமை காண முடியுமோ
தன்னந்தனியாய் வாழ்ந்து வெல்வது சுலபமோ
தவிக்கின்றேன் நான் தனிமையிலே
தாகம் தீர்க்க அவள் இல்லையே

என்னருகில் நீ வரும் வரை
தனிமை தான் என் போர்வை
வந்து சேர்ந்து விடு என்னிடம்
அன்பை கொடுத்து விடு என்னிடம்

காலம் கழிப்பதில் பயனொன்றும் இல்லை
தனித்து வாழ்வதில் சுகம் என்றும் இல்லை
தவிப்பினை அடக்க தேடினேன் அவளை
கண்டு கொள்ள மறுப்பதேனடி?

உன் அறிவிற்கு பதினாயிரம் பேர் சூழலாம்
உன் அழகுக்காக ஆயிரம் பேர் வரலாம்
உந்தன் மனதை தேடி வருபவர் எத்தனை பேரடி?
உன்னை கண்கலன்காது காக்க ஒருவன் தானடி
இந்த பேதை உள்ளம் கொண்ட நானடி ………… சுகுமார் ரா

 
2 Comments

Posted by on March 16, 2013 in Tamil Verses

 

உயிரோவியம்

என்னை கொள்ளும் ஓவியம் நீ
உன்னை கண்டு மயங்கி விழுந்தேன் நான்
எவராலும் வரைய முடியா படம் நீ
கலைமகளை மிஞ்சும் திருமேனி

உலக புகழ் பெற்ற ஓவியங்கள்
உனது அழகை கண்டு தலைவணங்கும்
அதை வரைந்த அதனை ஓவியர்கள்
கலைமகளிடம் சென்று  முறையிடவே

இத்துனை அழகை வரைவதற்கு
எத்துனை பிறவிகள் தவம் தேவை ?
கேள்விகள் கேட்டு துளைத்தெடுக்க
பிரம்மனிடம் செல்ல அவள் கூற
அவரிடம் சென்று முறையிட்டு
வினாக்கள் பல முன்னிறுத்த

ஆக்கும் ஆற்றல் கொண்ட எனக்கு
ஈரேழு பிறவிகள் ஆகியது
நான் படைத்த  உங்களுக்கு
ஈராயிரம் பிறவி ஆகக்கூடும்

பதில் கேட்ட ஓவியர்கள்
திடுக்கிட்டு விழித்தெழுந்து
தவம் புரிய முடிவெடுத்து
கலைமகளிடம் அறிவு கடன் கேட்க
தவக்கோலத்தில் அவர்கள் காத்திருக்க
உன் உயிரோவியத்தை இங்கு நான் ரசிக்க …………….. சுகுமார் ரா

 
6 Comments

Posted by on March 15, 2013 in Tamil Verses