RSS

Category Archives: General

தமிழக அரசியலும் ஈழ தமிழர் பிரச்சனையும்

இது என் முதல் அரசியல் சார்ந்த பதிவு. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாதது. சில உண்மைகளை மட்டும் மூலமாய் கொண்டு சிறிதளவு அலசுவது மட்டுமே.

சமீப காலமாக நடக்கும் அரசில் யுக்திகளை கண்டு சிறிது நொந்து வெந்து போங்கவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழி மட்டுமின்றி இலங்கையின் ஈழத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால் , வேறு ஒன்றும் இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. இதை நம் அரசியல் சாணக்கியர்கள் எவ்வாறு பயன் படுத்தி கொண்டார்கள் என்று பார்க்கலாம். இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த கருத்துக்களே . புதிதாக ஒன்றும் இல்லை.
கடந்த தமிழக சட்டசபை தேர்தல்கள் நடக்கும் முன்னர் வரை , தற்கால தமிழக முதல்வர் அவர்கள் கூறியது ” போர் என்றால் பலர் இறக்க தான் செய்வார்கள் , அதுவும் ஒரு நாட்டின் உள்நாட்டு போருக்கு வெளிப்படையாக எப்படி இன்னொரு நாடு உதவ முடியும்”. யோசித்து பார்த்தால் இலங்கை உள்நாட்டு போருக்கு எவ்வாறு இந்திய அரசு வெளிப்படையாக உதவ முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதை வைத்து பலர் இங்கே அரசியல் புரிவது கண்டால் , அவர்கள் புரிந்து செய்கிரார்களா , இல்லை புரியாமல் செய்கிரார்களா என்று எனக்கு புலப்படவில்லை.
விடுதலை புலிகளை பற்றி எனக்கு தெரிந்த உண்மைகள் இவை.
1. இலங்கையில் தோன்றிய ஆறு தமிழ் படைகளில் ஒன்று இது.
2. இதன் தலைவர் மற்ற ஐந்து படைகளின் அழிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளதை கேள்வி.
3. இந்த ஆறு படைகளும் இணைந்ததை பார்த்தவர் யாரும் இல்லை. ஐந்து படைகள் என்ன ஆயின என்ற செய்தி எங்கும் தென்படவில்லை.
4. பிரபாகரனை தமிழ் பாதுகவலறாய் சித்தரித்தார்கள்.
5. பல முறை பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தும் ,தமிழர்களுக்கு  தனி நாடு கொடுத்தே ஆகா வேண்டும் என்று மட்டுமே கூறிக்கொண்டு வந்தவர் பிரபாகரன். அப்போது அதிக படியாய் இருக்கும் சிங்களர்களுக்கு இவர்கள் மேல் வெறி வராதா?
சரி , இப்பொழுது பாலச்சந்திரன் கொலை செய்தியை கேட்டு , இலங்கைக்கு எதிராய் ஐநா சபைக்கு தூது அனுப்பாவிடில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று கூறி ராஜினாமா கடிதங்களை வழங்கிய உறுப்பினர்களை கண்டால் இது உண்மை காரணமாய் தோன்றவில்லை.
சரி , இந்த அரசியல் தலைவர் ஈழ தமிழர்களுக்கு எவ்வாறு உதவினார் என்று பார்போம்.
1. பிரதமருக்கு பல கடிதங்கள் அனுப்பினார்.
2. அதை பற்றி கவலை இன்றி இருந்தார்.
3. மந்திரி பதவிகள் வென்றும் என்ற பொது மட்டும் , தள்ளாத வயதிலும் தலைநகர் சென்று பேரம் செய்தார்.
4. பல ஊழல்களில் பங்கு எடுத்துகொண்டார்கள் உறுப்பினர்கள் என வழக்கு ஓடி கொண்டே இருக்கிறது.
5. ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் என்று பல புத்தம் புது கட்சிகள் , இலங்கை போர் சித்திரங்களை வீடு வீடாய் சென்று காட்டி, அரியணையில் இருந்து இறங்க நேரிட்டது.
இன்னும் கூட்டணியில் இருந்தால் , இவர்களுக்கு கஷ்ட காலம் என கருத்து எழ ஆரம்பித்தது, சரியான தருணம் நோக்க , இந்த சம்பவம் உதவி செய்தது.
தமிழகத்தை ஆளும் இரு கட்சிகளும் என்றும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தது இல்லை. அவர்களுக்காக போராடியதும் இல்லை. அவர்கள் உலக அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்ற காரணத்தை கட்டி அரசியல் செய்தன.
தற்கால முதல்வர் , தேர்தல் நேரத்திற்கு முன்னர்  வரை , ஈழத்திற்கு எதிராய் கருத்து தெரிவித்தவர் தான். அனால் அவர் இவர்களை பாதுகாப்பார் என எப்படி நம் மக்கள் நம்பி வாக்களித்தனர்? இந்த கேள்விக்கும் விடை எங்கும் இல்லை.
மொத்தத்தில் , இலங்கையின் உள்நாட்டு போரினை காரணமாய் கட்டி இங்கு பல அரசியல்கள் நடக்கின்றன. அனால் அவர்களுக்கு நல்ல வழி மட்டும் பிறக்க எந்த அரசியல் கட்சியும் பெரிதாய் ஒன்றும் செய்தது இல்லை. உண்மையிலே ஈழ தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் , அதை செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறியபோதே நம் அரசில் பிரமுகர்கள் , தம் ஆதரவை நிறுத்தி இருக்க வேண்டும் . காலம் சென்றபின் இக்கோலம் எதற்கு ?
மொத்தத்தில் இங்கு தமிழ் சமூக காப்பாளர் என்று கூறி கொள்ளும் எந்த அரசியல் வாதியும் , அதை செய்வதில்லை. ஈழம் இலங்கையின் ஒரு பகுதி. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. தமிழ் பேசும் ஒரே விடயம் மட்டும் தான் இரண்டிற்கும் பொதுவானது. அன்றி நேரடியாய் அடுத்த நாட்டின் உள்நாட்டு போரினை எதிர்கொள்ளும் ஆட்ற்றல் நம் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு இல்லை என்பதே என் கருத்து.
பின் குறிப்பு : இது என் கருத்து மட்டுமே. யாரையும் ஆதரித்தோ , எதிர்த்தோ சொல்வது இல்லை. யாரேனும் புண்படும் படியாய் இருந்தால் , என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
 
31 Comments

Posted by on March 22, 2013 in General, Politics